Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் : நெல்லை விவசாயிகள் பயன்பெறலாம்

திருநெல்வேலி

வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 மண் தள்ளும் இயந்திரங்கள், 8 டிராக்டர்கள், 11 நெல் அறுவடை இயந்திரங்கள், 2 டயர் வகை மண்அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. நிலம் சமன் செய்தல், உயர் பாத்தி அமைத்து விதைத்தல், காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், அறுவடை, பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், வாழைத்தண்டை துகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் உள்ளன.

டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 என்ற குறைந்தவாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மண்அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைக்கவும், புதர்களை அகற்றவும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660-க்கு விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

ஈரப்பதம் அதிகமாக உள்ள நெல் வயல்களில் அறுவடை செய்ய டிராக்டர் வகை நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.1,415-க்கும், காய்ந்த நிலையில் உள்ள நெல் வயல்களில் அறுவடை செய்ய சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.875-க்கும் வேளாண்மை பொறியியல் துறையால் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

சேரன்மகாதேவி வட்டங்களான சேரன்மகாதேவி, களக்காடு, முக்கூடல் மற்றும் நாங்குநேரி பகுதிகளில் கோடை பருவ நெல் அறுவடை நடைபெற்று வருவதால், இந்த பகுதி விவசாயிகள் சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பயனடையலாம். பள்ளகால் புதுக்குடி,மூலக்கரைப்பட்டி, மூன்றடைப்பு,தோட்டாக்குடி மற்றும் சிங்கிகுளம்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்சேரன்மகாதேவி வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளரை 9600159870 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

திருநெல்வேலி உதவி செயற்பொறியாளரை 9952527623 என்ற எண்ணிலும், திருநெல்வேலி செயற்பொறியாளரை 9443694245 என்றஎண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இத்தகவல் திருநெல்வேலிமாவட்ட ஆட்சியர் அலுவலகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x