பிஎஸ்என்எல் : விற்பனை உரிமம் : பெற வாய்ப்பு :

பிஎஸ்என்எல்  : விற்பனை உரிமம்  : பெற வாய்ப்பு :
Updated on
1 min read

ராணிப்பேட்டை, வந்தவாசி வட்டாரத்தில் பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம்பெறுவதற்கு விண்ணப்பிக் கலாம் என வேலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் வர்த்தக பகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் வந்தவாசி வட்டாரத்தில் சிம்கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கு நேரடி உரிமம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் தெரிவிக் கும் விண்ணப்பங்கள் வரும் 23-ம் தேதி வரை வரவேற்கப் படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு உதவி பொது மேலாளர் (விற்பனை/வர்த்தகம்) மணிராஜ் தேவகுமார் சாலமன் 9486103994 என்ற எண்ணில் அல்லது இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி (விற்பனை/வர்த்தகம்) கிரண்குமார் 94861 00962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in