Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

பெட்ரோல் பங்க்குகளில் - உயர்ரக சிசிடிவி கண்காணிப்பு : கேமரா பொருத்த வேண்டும் : காவல் துறையினர் அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மண் மற்றும் மணல் கடத்தல், சாராயம் விற்பனை, வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை, அரிசிகடத்தல், காட்டன் மற்றும் வெளிமாநில லாட்டரி விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை கண்டறிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கர வர்த்தி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்பி தனிப்படையினர் மாவட் டம் முழுவதும் கடந்த சில வாரங் களாக தொடர்ந்து ரோந்துப் பணி யில் ஈடுபட்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர். இந்நிலை யில், குற்றச்செயல்களில் ஈடுபட்டு காவல் துறையினர் கண்ணில் சிக்காமல் தப்பிவிடும் நபர்களை கைது செய்ய மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த மாவட்ட காவல் துறையினர் முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலை யில், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமை யாளர்கள் மற்றும் மேலாளர் களுக்கான கலந்தாலோசனை க்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல் ஆய் வாளர் லட்சுமி கலந்து கொண்டு பேசும்போது, ‘ஜோலார்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஏதுவாக ஒவ்வொரு பெட்ரோல் பங்க் நிலையங்களில் உயர்ரக கண்காணிப்பு கேமிராக் கள் பொருத்த வேண்டும். இப்பணிகள் அனைத்தும் வரும் 20-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

குற்றச்செயல்களை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண பொதுமக்களும், தொழில் அதிபர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x