

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கிரண்குமார் (21). இவர் கோவையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும், கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் அலைபேசியில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி கிரண்குமார் அந்த சிறுமியை வெள்ளகோவில் அழைத்து சென்று திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக, சிறுமியின் பெற்றோர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி, இருவரையும் கோவை வரவழைத்தனர். விசாரணைக்கு பிறகு கிரண்குமார் மீது ஆள் கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.