

பரமத்தி அருகே கீரம்பூரில் டாஸ்மாக் மதுபான கடை செயல் பட்டு வருகிறது. கடை மேற்பார்வை யாளராக தமிழ்செல்வன் (48), விற்பனையாளராக சண்முகம் (46) பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல்கடையை இரவு 8 மணிக்கு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மதுபான கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. தகவல் அறிந்த பரமத்தி போலீஸார் கடைக்குசென்று விசாரணை நடத்தினர். மது பாட்டில்கள் எதுவும் திருடப்பட வில்லை. பணம் வைக்கும் லாக்கரை உடைக்க முயற்சித்தது தெரிந்தது. லாக்கர் உடைக்க முடியாததையடுத்து மேசையில் இருந்த ரூ.ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக பரமத்தி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.