உளுந்தூர்பேட்டை அருகே பெண் கொலை :
உளுந்தூர்பேட்டை அருகே பெண் கொலை செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கணபதி மனைவி வெண்ணிலா(45). கட்டுமானத் தொழிலாளியான இவர் தினந்தோறும் பண்ருட்டி பகுதியில் கட்டுமான வேலைக்குச் சென்றுவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன் தினம் வேலைக்குச் சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுளாப்பட்டு குறுக்கு சாலையோரம் உள்ள குட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்த திருநாவலூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் வெண்ணிலா கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதை யடுத்து போலீஸார் விசார ணை நடத்தியதில் ஆறுமுகம் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
