Regional01
அறந்தாங்கியில் அதிமுக பிரமுகர் கைது :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(47). டாஸ்மாக் மதுபானக் கடையின் மேற்பார்வையாளரான இவரி டம், அதிமுக நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மண்டல முத்து மாமூல் கேட்டதாகவும், அதற்கு மறுத்த கார்த்திகேயனை மண்டலமுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீஸார் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்து மண்டலமுத்துவை கைது செய்தனர்.
