

திருநெல்வேலி, குறுக்குத் துறை யில் உள்ள முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு கும்பம் வைத்து, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், சிறப்புப் பூஜை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.