வேலூர், திருப்பத்தூரில் இருந்து - புதுச்சேரிக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம் :

வேலூர், திருப்பத்தூரில் இருந்து  -  புதுச்சேரிக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம் :
Updated on
1 min read

வேலூரில் இருந்து புதுச்சேரிக்கு இன்று முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்கு வரத்துகழக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

வேலூர் போக்குவரத்து மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன.

அதேபோல, 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 222 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் தனியார் பேருந்துகளும் இயங்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் முதல் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக காணப்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொற்று பரவல் குறைவு

இதைத்தொடர்ந்து, புதுச்சேரிக்கு அரசுப் பேருந்துகள்இன்று முதல் இயக்கப்படுகின்றன. வேலூரில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு 3 அரசுப் பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு பேருந்தும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருப்பத்தூரில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது. மொத்தமாக 5 பேருந்துகள் ஏற்கெனவே உள்ள நேரப்படி அந்தந்த பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in