

இதுகுறித்து லியாகத் அலி கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், வந்தவாசி கோட்டை பகுதியில் வசிக்கும் ஹரிஹரன்(34) மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். பின்னர், வேலூர் மத்திய சிறையில் ஹரிஹரனையும், கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவனையும் அடைத்தனர்.