கரோனாவால் இறந்ததற்கான சான்றிதழ் தர அதிகாரிகள் மறுப்பு : ஆய்வு கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார்

கரோனாவால் இறந்ததற்கான  சான்றிதழ் தர அதிகாரிகள் மறுப்பு :  ஆய்வு கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இதில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி, சுகாதாரத் திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 80 சுகாதார நிலையங்கள் உள்ளன. அதில் கட்டிடங்கள் சேதம், இரவு நேரங்களில் செவிலியர் பணியில் இல்லை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

அதேபோல், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும் குறைபாடுகள் உள்ளன. கரோனா பாதித்து இறந்தவர்களுக்கு கரோனாவால் இறந்ததற்கான சான்று தருவதில்லை. அவர்கள் வேறு உடல்நிலைப் பாதிப்பு காரணமாக இறந்ததாக சான்றிதழ் தருகின்றனர். இதனை அமைச்சர் கவனிக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in