கிணற்றில் விழுந்த தாத்தா, பேரன் உயிரிழப்பு  :

கிணற்றில் விழுந்த தாத்தா, பேரன் உயிரிழப்பு :

Published on

தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் அருகே உள்ள தோணுகால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (60). விவசாயி.

இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன் மாரிமுத்துவுக்கு திருமணமாகி 2 வயதில் ஹரிவர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. மாரியப்பன் தனது பேரன் ஹரிவர்ஷனுடன் தோட்டத்துக்குச் சென்றார்.

கிணற்றின் அருகே நடந்து சென்றபோது, பேரனுடன் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இருவரும் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நீரில் மூழ்கிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து பனவடலிசத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in