

தோக்கவாடி ஊராட்சியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:
திருச்செங்கோடு அருகே தோக்கவாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாத்தம்மன் கோயில் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இச்சூழலில் அங்கு டாஸ்மாக் மதுபானக் கடை திறந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையூறு ஏற்படும்.
எனவே, தோக்கவாடி ஊராட்சியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கக் கூடாது, என்றனர்.