

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் கருப்பசாமி (42), ஆட்டோ ஓட்டுநர். நேற்று காலையில் மேலப்பாளையத்துக்கு பழங்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து குறிச்சிமுக்கு வாய்க்கால் பாலம் அருகே சிறிய பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய கருப்பசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.