

எம்.பி.சி. பட்டியலில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டில் சமமான சமூக நீதி வேண்டும் என தமிழ்நாடு வண்ணார் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநில பொதுச்செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் எம்.பி.சி. பட்டியலில் உள்ள 115 சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் சமமாக கிடைக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எம்.பி.சி. பட்டியலில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான சமூக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.