சேலம் மாவட்டத்தில் 4-வது நாளாக : தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் :

சேலம் மாவட்டத்தில் 4-வது நாளாக  : தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 4-வது நாளாக தடுப்பூசி மையங்களில் மருந்து இருப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசி மையங்களுக்கு ஒதுக்கப்படும் டோஸ்களின் எண்ணிக்கை ஆகியவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மையங்களுக்கு வரும் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வரை 8 லட்சத்து 38 ஆயிரத்து 146 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in