Published : 08 Jul 2021 03:14 AM
Last Updated : 08 Jul 2021 03:14 AM

நேதாஜி மார்க்கெட்டில் வியாபாரத்துக்கு அனுமதிக்காவிட்டால் - காய்கறி வியாபாரத்தை நிறுத்துவோம் : வேலூர் வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

வேலூர்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரத்துக்கு அனுமதி வழங்காவிட்டால் வியா பாரத்தை நிறுத்தி விடுவோம் என காய்கறி வணிகர் சங்க ஆலோ சனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி வணிகர் சங்க ஆலோ சனைக்கூட்டம் சண்முகனடியார் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, நேதாஜி மார்க்கெட் காய்கனி வணிகர்கள் சங்கத் தலைவர் பாலு தலைமை தாங்கினார்.

முன்னதாக சங்கச் செயலாளர் எல்.கே.எம்.பி.வாசு வரவேற்றார். வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ.வி.எம்.குமார், பொருளாளர் அருண் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது குறித்து காய்கறி வணிகர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை நடைபெறவில்லை. வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், அனைத்து கடைகளையும் நேதாஜி மார்க் கெட்டில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த வியாபார காய்கறி கடைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.

இன்னும் 4 நாட்கள் காத் திருங்கள், உரிய ஆய்வு நடத்தி அதன் பிறகு, வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். அதை, நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எனவே, ஜூலை 12-ம் தேதி முதல் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வேலூரில் காய்கறி மொத்த வியா பாரம் நிறுத்தப்படும்.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 16-ம் தேதி கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x