பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து - நெல்லையில் சிஐடியூ நூதனப் போராட்டம் :
திருநெல்வேலியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியூ சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ பொதுச்செயலாளர் ஜோதி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்தார். சாலை போக்குவரத்து சிஐடியூ மாவட்ட பொருளாளர் தன்ராஜ், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், அரசு போக்குவரத்து சங்க இணை பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து மற்றும் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் காமராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளர் மோகன் மாலை அணிவித்தார்.
சிஐடியூ சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
