

புவனகிரி அருகே வடக்கு திட்டையில் வலுவிழந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி அருகே உள்ள வடக்கு திட்டை கிராமத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.
தற்போது இது வலுவிழந்து, பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதன் தூண்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பி தெரிகிறது.
இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த மேல்நிலைநீர் தேக்க தொட்டி இருக்கும் இடத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகவும் இருக்கிறது. இதனை
அகற்றிவிட்டு வேறு இடத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.