குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் :

ஆனந்தவாடியிலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்தை நேற்று தொடங்கி வைத்து, ஓட்டிச் செல்கிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
ஆனந்தவாடியிலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்தை நேற்று தொடங்கி வைத்து, ஓட்டிச் செல்கிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
Updated on
1 min read

அரியலூரை அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள வேங்கன் ஏரியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மதகுகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், மாநில பிற்படுத் தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, பணிகளை தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, திருமானூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி, குறுவை சாகுபடி தொகுப் புத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “அரியலூர் மாவட்டத்தில் 4,875 ஏக்கர் பரப்பளவில் ரூ.70.29 லட்சம் மதிப்பீட்டில் குறுவை சாகு படி தொகுப்புத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது” என்றார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேருந்தை ஓட்டிய அமைச்சர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in