

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங் களில் தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், காஸ், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் டாஸ்மாக் கடைகள் திறப்பு, அறிவிக்கப்படாத மின் வெட்டு ஆகியவற்றைக் கண் டித்து, தேமுதிகவின் ஒருங்கி ணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்டன உரையாற் றினார். ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பி.எல்.கிருஷ்ண கோபால், டி.வி.கணேஷ், கே.எஸ்.குமார், எஸ்.அலங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்டச் செயலாளர் ராம.ஜெயவேல், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் மாவட்டச் செயலாளர் துரை.காமராஜ், கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிரணி செயலாளர் மாலதி வினோத் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர் மாவட்டச் செயலாளர் ப.ராமநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கே.பழனிவேல், கோ.சங்கர் உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை அவுரித்திடலில் மாவட்டச் செயலாளர் டி.வைரவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாநில தேர்தல் பணிக் குழுச் செயலாளர் கொ.தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்டச் செயலாளர் ஜலபதிராஜ் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டங்களில் பங்கேற் றோர், காஸ் சிலிண்டர், ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமைப்பது போல பாவித்தும் பல்வேறு வழிகளில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.