

அரியலூரில் 46, கரூரில் 37, மயிலாடுதுறையில் 29, நாகையில் 33, பெரம்பலூரில் 20, புதுகையில் 56, தஞ்சாவூரில் 218, திருவாரூரில் 44, திருச்சியில் 157 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 640 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை 4, தஞ்சாவூர், திருச்சி தலா 3, கரூர், நாகை, திருவாரூர் தலா 2, பெரம்பலூர் 1 என மொத்தம் 17 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.