

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.4.20 கோடியில் சலவைத்துறை மற்றும் ரூ.2.84 கோடியில் மிதிவண்டி பாதை அமைக்கும் பணிகளை ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்புத் தொண்டர் தெரு மற்றும் கருப்பந்துறை பகுதிகளில் சலவை தொழிலாளர்களுக்கு டோபி கானா (சலவைத்துறை) ரூ. 4.20 கோடியில் அமைக்கப்படவுள்ளது.
என்.ஜி.ஒ காலனிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,800 மீட்டர்நீளத்துக்கு மிதிவண்டி பாதை அமைக்கப்படவுள்ளது. தாமிபரணி ஆற்றுப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நீர்நிலையை காப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் மற்றும்சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி மாசுபடுவதை தடுப்பதற்காக மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது.
தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் சலவைத் தொழிலாளர்கள் துணிதுவைக்கும் பகுதியில்தண்ணீரில் ஏற்படும் மாசுவை குறைப்பதற்காக அங்கு மறுசுழற்சி முறையில் தண்ணீரை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றைதூய்க்ஷமைப்படுத்தும் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ மு. அப்துல் வகாப், மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.