

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் இன்று 400 பேருந்துகள் இயக்கப்படஉள்ளதாக, அரசு போக்கு வரத்துக் கழக ஈரோடு மண்டல துணை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளில் இருந்து728 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. ஊரடங்கு தளர்வு களைத் தொடர்ந்து 60 சதவீதம் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி400 பேருந்துகள் வரை ஈரோடுமாவட்டத்தில் இருந்து இயங்கும். அரசு வழிகாட்டு தலின்படி பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். எனினும், பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.
பயணிகள் அரசின் வழி காட்டு நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பேருந்தில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப் படுவர். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி யாரும் பேருந்துகளில் பயணிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.