

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் சரிந்ததால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே திருநகர் காலனியில் சாலையோரம் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. நேற்று திடீரென ஒரு கம்பம் சரிந்து விழுந்தது. இதையடுத்து அந்த மின்கம்பத்தோடு தொடர்புடைய 5 மின் கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து கீழே விழுந்தன.
தகவலறிந்து வந்த மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். தொடர்ந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தவிர, அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.