

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரின் பயன்படுத்தி சுத்தி கரித்து வழங்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பேசினார்.
குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து உள்ளாட்சித்துறை மற்றும்குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் களுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
ஊரக பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் மேற்கொள் ளும் போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட நீரை தனியாகவும், உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்டுவழங்கப்படும் நீரை தனியாகவும் என சுழற்சி முறையில் பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு குடிநீர் விநி யோகிப்பதற்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குளோரின் பயன்படுத்தி சுத்திகரித்து வழங்க வேண்டும். உள்ளாட்சித்துறைகளின் அலு வலர்கள் தங்கள் பகுதிகளில் தெரு விளக்கு பழுதடைந்தால் உடனுக்குடன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கென தனியாக கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பருவமழை தொடங்க உள்ளதையொட்டி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் சாக்கடைகளில் அடைப்பு இருப்பின் உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமைசெயற்பொறியாளர் எ.வரதராஜா பெருமாள், தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரியம் செயற்பொறி யாளர்கள் பெரி. நடராஜன், ராஜமாணிக்கம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.