

ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களாக உள்ளூர்வாசிகளையே நியமிக்க வலியுறுத்தி அரங்கன் பாதுகாப்பு பேரவை சார்பில் ரங்கம் வெள்ளை கோபுரம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பேரவை யின் அமைப்பாளர் அனந்த பத்மநாபன் தலைமை வகித்தார். தலைவர் செல்லப்பா, துறவிகள் பேரவை மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அறங் காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் ஆகி யோர் நியமிக்கப்படும் போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியும், அறநிலையத் துறை விதிமுறைகளின்படியும் நியமிக்க வேண்டும். அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்களாக கோயில் பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மற்றும் வைணவ மரபுகளை அறிந்த உள்ளூர்க்காரர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
கோயில் மூலவர் அமைப்பை மாற்றியது, சுற்றுக் கோயில் களில் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து உரிய அறிக்கையை அரசுக்கு அனுப்பவும், நிலங்கள் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் ஐஏஎஸ் அதிகாரியை நிர்வாக அதிகாரியாக நியமித்து நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும். கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்.
நிர்வாக அதிகாரியின் தலை யீடு இல்லாமல் ராமானுஜரின் நிர்வாக முறைப்படி பூஜைகள், உள்துறை நிர்வாகம் ஆகிய வற்றை ஸ்தலத்தார்களே நிர்வ கிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் பங்கேற் றனர்.