

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என அதி காரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை வழங்கினார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலு வலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப் ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசும்போது, ‘‘திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மக்களுக்குத் தேவையான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நகரின் கட்டமைப்புகளை மேம்படுத்து வதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்’’ என்றார்.
முன்னதாக திருச்சி மாநக ராட்சியில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 14 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான ஆணையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இக்கூட்டத்தில் நகரப் பொறியா ளர் அமுதவல்லி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் கே.ஜி.சத்தியபிரகாஷ், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.