

தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை தேடிக் கொண்டிரு ப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு, வயது வரம்பு 18 முதல் 50 வரை இருக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடு க்கப்படுவோருக்கு செய்யும் வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத் தொகை மட்டும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் ரூ.5,000-க்கு என்எஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்பிக்க வேண்டும். அவர்களது உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பித் தரப்படும்.
விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெற லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், அதனுடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்வி சான்றுகளின் நகல்களை இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தூத்துக்குடி கோட்டம், தூத்துக்குடி- 628001 என்ற முகவரிக்கு 25.07.2021-க்குள் கிடைக்குமாறு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு தூத்துக் குடி அஞ்சல் ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலரை 9894241280 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.