ஈரோட்டில் நேற்று 113 இடங்களில் 16,670 பேருக்கு கரோனா தடுப்பூசி :

ஈரோட்டில் நேற்று 113 இடங்களில் 16,670 பேருக்கு கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 113 இடங்களில் நடந்த தடுப்பூசி போடும் முகாமில், 16 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 253 பேருக்கு கரோனா தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் முகாம்களில் நள்ளிரவு முதலே மக்கள் குவிய தொடங்கி விடுகின்றனர்.

இதனால் ஏற்படும் கூட்டத்தை தவிர்க்க சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முன்னதாக வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். இதன்படி மாவட்டம் முழுவதும் 15, 170 கோவிஷீல்டு, 1,500 கோவேக்சின் என மொத்தம் 16 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் கோவேக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது, என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

படம் உள்ளது.

ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் நேற்று கரோனா நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in