

ஈரோடு அருகே ஆட்டையாம்பாளையத்தில் உள்ள நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையத்தில் நூற்பாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு பணியாளர்கள் ஆலையை பூட்டி சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் டீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு, பவானி, பெருந்துறை ஆகிய 3 தீயணைப்பு நிலையத்தினர் 4 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம், என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். தீ விபத்தில் நூல்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன.
படம் உள்ளது.
ஈரோடு சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.