

புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவகம் மற்றும் இனிப்பகங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை லிட்டர் ரூ.25-க்கு கடைக்காரர்களிடம் இருந்து வாங்கி, அவற்றை ரூகோ எனும் நிறுவனம் மூலம் பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக, மாவட்டத்தில் உள்ள பெரிய அளவிலான உணவகம் மற்றும் இனிப்பக உரிமையாளர்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் பிரவீன் தலைமையிலான ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டனர்.
இதுகுறித்து பிரவீன் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 பெரிய உணவகம் மற்றும் இனிப்பகங்களைத் தேர்வு செய்து, அவற்றுக்கு தலா ஒரு காலி பிளாஸ்டிக் கேன் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில், சேகரித்து வைக்கப்படும் எண்ணெயை லிட்டர் ரூ.25-க்கு பெற்று, அதிலிருந்து பயோ டீசல் தயாரிப்பதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்படும் என்றார்.