கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது : மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீஸார்

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது :  மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீஸார்
Updated on
1 min read

வத்திராயிருப்பில் இடத்தகராறில் பெரியப்பாவைக் கொலை செய்துவிட்டு காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை மாறுவேடத்தில் சென்று போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்தி ராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்தவர் பிலாவடியான் (73). கூலித் தொழிலாளி. இவரது வீட்டுக்கு அருகே உள்ள இடம் தொடர்பாக பிலாவடியானுக்கும் அவரது மனைவியின் தங்கை மகன் பூமாடன் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்து ள்ளது.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி வத்திராயிருப்பு காவல் நிலையம் அருகே வெள்ளைபிள்ளையார் கோயில் அருகே அரசம ரத் தடியில் அமர்ந்திருந்த முதி யவர் பிலாவடியானை குடி போதையில் வந்த பூமாடன் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி யோடியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காய மடைந்த பிலாவடியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வந்த வத்திராயிருப்பு போலீஸார் சலட லத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த பூமாடனை போலீஸார் தேடி வந்தனர். மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் பூமாடன் சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸார் மாறுவேடத்தில் சென்று அவரைத் தேடிவந்தனர். சேதுநாராயணபுரம் பகுதியில் கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளுடன் சுற்றித்திரிந்த பூமாடனை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in