

தேனி அருகே முத்துதேவன்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் ஜீவன் (18). இவர் கோடாங்கி பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். போடேந்திரபுரம் அருகே சென்றபோது நாய் குறுக்கே ஓடியதால் நிலை தடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மதனகலா விசாரித்து வருகிறார்.