Published : 03 Jul 2021 03:14 AM
Last Updated : 03 Jul 2021 03:14 AM
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயாருக்கு நேற்று ஜேஷ்டாபி ஷேகம் நடைபெற்றது.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஜூன் 23, 24 தேதிகளில் ரங்க நாதருக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தாயார் சன்னதியில் மூலவர்கள் தேவி, பூதேவி, உற்சவர் ரங்கநாச்சியார் ஆகி யோருக்கு நேற்று ஜேஷ்டாபி ஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, நேற்று காலை திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள் உள்ளிட்டோர் அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து ஒரு தங்கக்குடம், 28 வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வந்தனர். இதில் தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோயில் யானை ஆண்டாள் மீது வைத்து எடுத்து வரப்பட்டது. பின்னர், தாயார் சன்னதியில் மூலவர்கள் தேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
முன்னதாக தேவி, பூதேவி மற்றும் ரங்கநாச்சியார் திருமேனி யில் உள்ள கவசங்கள், திருவாபர ணங்கள் அனைத்தும் களையப் பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
இதையடுத்து பாரம்பரிய முறை யில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட தைலம் தேவி, பூதேவி மீது பூசப்பட்டது.
ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இன்று (ஜூலை 3) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப் படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தாயார் சன்னதி எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெரும ளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம் பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவை கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப் படும். இந்தாண்டு கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனும தியில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT