

சாத்தான்குளம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரம் கிராம த்தைச் சேர்ந்தவர் குமார் என்ற அருமைகொடி (55), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. அருமைகொடி நேற்று வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த ஆசீர்வாதம் மகன் செல்வராஜ் (54), மற்றொரு செல்வராஜ் மகன் தாவீது (24) ஆகியோரும் சென்றுள்ளனர்.
மதியம் வேலை முடிந்து வந்தபோது அருமைக்கொடி உட்பட 3 பேரும் புதுக்குளம் விலக்கில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அருமைக் கொடி கீழே தள்ளப்பட்டு, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் தலைமை யிலான போலீஸார் அருமை க்கொடியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோனை க்காக சாத்தான் குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர். செல்வராஜ், தாவீது இருவரையும் போலீ ஸார் கைது செய்து விசாரிக் கின்றனர்.