

விருதுநகரில் மாவட்ட பாஜக நிர்வாகி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசினர்.
விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். மாவட்ட பாஜக இளைஞர் அணி பொதுச் செயலராகப் பொறுப்பு வகிக்கிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வடமலைக்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சக்திவேல் மீது இரண்டு பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசினர். சுதாரித்துக் கொண்டு விலகியதால் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரிடம் நேற்று அவர் புகார் கொடுத்தார். அதில், சட்ட விரோதமாக மசூதி கட்டுவதை எதிர்த்ததால் என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர். அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சக்திவேலை ஏற்கெனவே இரு முறை மர்ம நபர்கள் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.