பாளை. அரசு சித்த மருத்துவமனைக்கு - ரூ. 3 லட்சத்தில் நவீனரத்த பரிசோதனை கருவி :

பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தானியங்கி ரத்த பரிசோதனை கருவியை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கிவைத்தார்.
பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தானியங்கி ரத்த பரிசோதனை கருவியை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கிவைத்தார்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.3.12 லட்சம் மதிப்பிலான தானியங்கி ரத்த பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு இதை வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, ``கரோனா பேரிடர் காலங்களில் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டது. இங்கு ரத்தம் பரிசோதனை மேற்கொள்ள குறைந்தது 1.30 மணிநேரம் தேவைப்பட்டது. தற்போது, ரூ.3.12 லட்சம் மதிப்பில் தானியங்கி ரத்த பரிசோதனை கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியின் மூலம் 3 நிமிடங்களில் ரத்த பரிசோதனை செய்து முடிக்க முடியும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் தட்டணுக்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றினை மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் பரிசோதனை செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.

மு.அப்துல்வகாப் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.திருத்தணி, துணை முதல்வர் ஏ.மனோகர், உறைவிட மருத்துவர் பி.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in