சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மனு :

சமையல் எரிவாயு  சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள்,  தங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாளையங்கோட்டையில் அப்துல் வகாப் எம்எல்ஏவிடம்  மனு அளித்தனர். படம்: மு.லெட்சுமி அருண்
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், தங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாளையங்கோட்டையில் அப்துல் வகாப் எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

சமையல் எரிவாயு சிலிண்டர் களை விநியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல் வகாபிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அனைத்து எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனு விவரம்:

அனைத்து எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று (30-ம் தேதி) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாத ஊதியம் வழங்காத ஏஜென்சிகள் முறையாக ஊதியம் வழங்கவும், பிஎப், இஎஸ்ஐ படித்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன வசதிகளை ஏஜென்சிகள் செய்து தர வேண்டும். வாடிக்கையாளர்கள் தரும் இனாமில் பாதியை ஏஜென்சி நிர்வாகமே பிடித்துக்கொள்கிறது. மேலும் ஏஜென்சிகள் தரும் வாகனத்துக்கு ரூ.650, ரூ.450 என்று எங்களிடமே தினமும் வாங்கி விடுகிறார்கள்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in