சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை  :

சுந்தரனார் பல்கலை. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை :

Published on

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மருதகுட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன் கோவில், சேரன்மகாதேவி, நாகம்பட்டி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நாகலாபுரம், கன்னியாகுமரி, கடைய நல்லூர் ஆகிய இடங்களில் இயங்கிவரும் உறுப்பு கல்லூரிகள் தற்போது அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த 9 கல்லூரிகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.msuniv.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விவரங் களை அறியலாம். இளங்கலை படிப்புக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in