

செய்யாறில் இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளில் மணல் கடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
செய்யாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காலர்கள் சிலர் கொடநகர் ஆற்றுப்படுகையில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் மூன்று மணல் மூட்டைகளுடன் வந்த கொட நகர் தேவநேரி கரை பகுதியைச் சேர்ந்த கபாலி என்ற முருகனை (37) காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், இரு சக்கர வாகனத் துடன் மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.