Published : 01 Jul 2021 03:18 AM
Last Updated : 01 Jul 2021 03:18 AM

நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு உயிரிழப்பு :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டகிந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (57). இவர், தனக்கு சொந்தமான பசுமாட்டை வனப்பகுதியையொட்டியுள்ள இடத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

அப்போது, அங்கு கிடந்த மாங்கொட்டையை பசுமாடு கடித்தபோது அதில் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில், பசுமாடுவின் வாய் பகுதி பாதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.

இது குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டை வைத்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x