

தேனி அருகே வாழையாத்துப் பட்டியைச் சேர்ந்தவர் ராஜாராம் (60). சென்ட்ரிங் தொழிலாளி.
இவர் பூதிப்புரம் அருகே உள்ள பூபாலசமுத்திரம் கண் மாயில் குளிக்கச்சென்றார். சேறு அதிகம் இருந்ததால் அவரால் வெளியேற முடியவில்லை. நின்ற நிலையிலேயே மூச்சுத் திணறி இறந்தார். இவரது மகன் ஜோதிரூபன் கொடுத்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா விசாரித்து வருகிறார்.