

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் கோட்டாட்சியர் கவுசல்யா வுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சின்னமனூர் அருகே தென்னஞ்சாலை பகுதி யில் ஆய்வு நடத்தப்பட்டது.
அங்கு பதுக்கி வைத்திருந்த 9 டன் எடையிலான 209 மூட்டை ரேஷன் அரிசியும், 98 கிலோ கோதுமையும் பறிமுதல் செய்து நுகர்வோர் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
தனித்துணை வட்டாட்சியர் த.சந்திரசேகரன் புகாரின் பேரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் விஜயகாண்டீபன் விசாரித்து வருகிறார்.