

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே. புரம் அருகேயுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் அஸ்வின். பாவூர்சத்திரத்திலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் இவரது நண்பர்களும் நேற்று முன்தினம் மாலையில் பாபநாசம் தலையணையில் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென்று அஸ்வின் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வி.கே. புரம் போலீஸாரும், அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினரும் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்ட னர். இந்நிலையில் நேற்று காலையில் மாணவரது உடல் மீட்கப்பட்டது.