Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM

நெல்லையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது :

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியிருந்த நிலையில், திருநெல்வேலி மாநகரில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.19 ஆக உயர்ந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.08 ஆகஇருந்தது. திருநெல்வேலி புறநகர் பகுதிகளான நாங்குநேரி, அம்பாசமுத்திரம், களக்காடு, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்னரே லிட்டர் ரூ.100 ஐ தாண்டியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x