திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கிய கோட்டாட்சியர் வெற்றிவேல்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கிய கோட்டாட்சியர் வெற்றிவேல்.

திருவண்ணாமலையில் ஜமாபந்தி நிறைவு :

Published on

வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சமுக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரமேஷ் குமார், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

சமுத்திரம், தென்மாத்தூர், கொளக்குடி, அரடாப்பட்டு, பவித்திரம், மெய்யூர் மேல்செட்டிப்பட்டு, சு.பாப்பம்பாடி உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கான ஆண்டு தணிக்கையை கோட்டாட்சியர் வெற்றிவேல் மேற்கொண்டார். மேலும் அவர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், குறுவட்ட நில அளவையர் வேலுநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழுமலை, மாதவன், ராகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிராம நிர்வாக அலுவலர் சீனுவாசன் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in