

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அர்ச்சனா தனது வீட்டில் சகோதரர் மஞ்சுநாதனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது , அங்கு சென்ற ராஜ்குமார் மது அருந்த பணம் கேட்டு மகளிடம் தகராறு செய்தார். இதை தட்டிக்கேட்ட மஞ்சுநாதனை மறைத்து வைத்திருந்த பிளேடால் கிழித்துள்ளார். அப்போது, தடுக்க வந்த மகளை மாடிப் படியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். தந்தை தாக்கியதில் காயமடைந்த மஞ்சுநாதன், அர்ச்சனா ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மஞ்சுநாதன் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.