‘சமூக ஊடகம் வாயிலாக மின் புகார் தெரிவிக்கலாம்’ :

‘சமூக ஊடகம் வாயிலாக மின் புகார் தெரிவிக்கலாம்’ :
Updated on
1 min read

வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் நுகர்வோர் குறைகளை சமூக ஊடகங்கள் வழியாக தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் நுகார்வோர்கள் தங்களின் குறைகள் மற்றும் மின் புகாரை தெரிவிக்க வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடக கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மின் பயன்பாடு மற்றும் அது தொடர்பான புகார்களை வாட்ஸ்-அப் எண் 63802-83535 அல்லது பேஸ்புக்கில் @tangedco.vellore இன்ஸ்டாகிராமில் Tangedco.vellore டிவிட்டரில் tangedco.vellore என்ற பக்கத்தில் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in