Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

ஆயுதப்படை காவலர் கரோனாவால் உயிரிழப்பு - வேலை வழங்கக்கோரி மனைவி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு :

ஆயுதப்படை காவலர் கரோனா வால் இறந்ததால் வேலை வழங்கக்கோரி அவரது மனைவி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

சென்னை மடிப்பாகத்தைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவர் நேற்று தனது இரண்டு குழந் தைகளுடன் விழுப்புரம் ஆட்சி யர் அலுவலகத்தில் ஒரு மனுஅளித்தார். அம்மனுவில் கூறியி ருப்பது:

எனது கணவர் விஜய பாலாஜி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக விழுப்புரம் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சில நாட்களில் இறந்து விட்டார்.

நாங்கள் கடந்த 2014-ல் கலப்பு திருமணம் செய்து கொண்டோம். தற்போது 6 வயதில் ஒரு மகனும், மூன்று மாத பெண் கைக்குழந்தையும் உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளை பராமரிக்க எங்களிடம் போதுமான பண வசதி இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு வருகிறோம்.

எங்களை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. எனது மாமனார், மாமியாரும் கரோனா தொற்றினால் அதே மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர். எனவே, தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

எனது குடும்ப சூழ்நிலை, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வித் தகுதிக்கு ஏற்ப காவல் துறையில் கருணை அடிப்படையில் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x